Asianet News TamilAsianet News Tamil

உரிமைகளை கேட்டு போராடினால் சட்டவிரோதமானதா..? 3,000 ஜூனியர் மருத்துவர்கள் ராஜினாமா..!

 ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
 

Is it illegal to fight for rights? 3,000 junior doctors resign
Author
Uttar Pradesh West, First Published Jun 4, 2021, 12:42 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வையுறுத்தி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் என அம்மாநில உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் நான்கு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் உதவித்தொகை உயர்வு மற்றும் கோவிட் -19 பாதிக்கப்பட்டால் தங்களுக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.Is it illegal to fight for rights? 3,000 junior doctors resign

இந்த சூழலில் வேலைநிறுத்தம் செய்யும் ஜூனியர் மருத்துவர்களை 24 மணி நேரத்திற்குள் மீண்டும் பணியில் சேருமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது, மேலும் நான்கு நாள் வேலைநிறுத்தத்தை "சட்டவிரோதமானது" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.  ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் வியாழக்கிழமை தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்து, அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு ராஜினாமாவை சமர்ப்பித்ததாக மத்தியப் பிரதேச ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா தெரிவித்தார்.

Is it illegal to fight for rights? 3,000 junior doctors resign

இது தொடர்பாக பேசிய அவர், “திங்கள்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தம், எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எம்.பி.ஜே.டி.ஏ மேல்முறையீடு செய்யும். மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் தங்கள் போராட்டத்தில் சேருவார்கள். ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் எய்ம்ஸ் ரிஷிகேஷை சேர்ந்த ஜூனியர் மற்றும் மூத்த மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறார்கள்" என அரவிந்த் மீனா கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios