மக்களை சந்திப்பது பெரிதா..? வீட்டிலேயே அமர்ந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங்கில் பேசுவது பெரிதா..? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

.

சேலம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள வாணியம்பாடியில், அம்மா மினி கிளினிக்கை திறந்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது, ‘’ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதற்கு ஏற்ப ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர். அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. மக்கள்தான் அவர்களது வாரிசுகள். கொரோனா பேரிடர் காலத்தில், தான் மாவட்டந்தோறும் நேரில் சென்று நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். மக்களை சந்திப்பது பெரிதா அல்லது வீட்டிலேயே அமர்ந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங்கில் பேசுவது பெரிதா?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.