திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.

விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சிவகுமார் பேசியதாக, ‘கோடிஸ்வரன் பொண்டாட்டிக்கு தெரியாம ல்ஒரு குமரியை கூட்டிட்டு போய் ரூம் போட்டு தங்கி விடிய விடிய தண்ணீ அடிச்சிட்டு காலையி குளிக்காமல் 4.30 மணிக்கு கோயிலுக்கு போனால் கும்பம் வைத்து மரியாதை செய்கிறார்கள்’’எனப் பேசியிருந்தார். இந்நிலையில் சிவகுமார் மகன் கார்த்தி கோயிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்தப்புகைப்படத்தை பகிரும் நெட்டிசன்கள், ‘’சிவகுமார் சொன்ன கோடீஸவரரை கண்டு பிடிச்சாச்சு... ஆனா அந்த இளம் பெண் யார் என்று தான் தெரியவில்லை’’எனத் தெரிவித்து வருகின்றனர்.