தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், வதந்தி பரப்பிய 8 பேரை தமிக போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து பிரான்ஸ் வாழ் தமிழச்சி என்பவர் தமது பேஸ்புக் பதிவில், முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிந்து விட்டதாக வெளியிட்டிருந்தார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், பிரான்ஸ் தூதரகம் மூலம் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரின்பேரில் பிரான்ஸ் வாழ் தமிழச்சியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், பிரான்ஸ் நாட்ட சட்டப்படி வதந்தி பரப்புகிறவர்கள் மீது அபாரதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும், கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
