Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா..? கடுப்பான மு.க.ஸ்டாலின்..!

அதிமுகவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது'எனத் தெரிவித்தார். 

Is Election Commissioner Palanisamy?or Edappadi Palanisamy ..?
Author
Tamil Nadu, First Published Dec 2, 2019, 1:10 PM IST

பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி  மட்டுமே வெளியாகியுள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.Is Election Commissioner Palanisamy?or Edappadi Palanisamy ..?

இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்தார்.அதன்படி ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில்  2 கட்டங்களாக தமிழகத்தில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2, 2020 அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும் மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால் அறிவிப்பு வெளியிடவில்லை.நகரப் பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்'என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து 'ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.Is Election Commissioner Palanisamy?or Edappadi Palanisamy ..?

உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. இதுவரை ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் தற்போது 2 கட்டமாக அறிவித்துள்ளனர். வார்டு மறுவரையறை பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. 

அதிமுகவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது'எனத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios