இந்து மதத்தை இகழ்வது மட்டும் தான் உங்க திராவிடமா? வெளிநாட்டு மதங்களை தமிழர்களிடம் திணிக்கும் அடிமைகளை பற்றி திராவிடம் பேசுமா? என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இந்து கலச்சாரம் தமிழர் கலச்சாரம் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். தமிழர் மதம் எது?! அந்த மதத்தையோ, இறைவனையோ, கலச்சாரத்தை போற்றியோ, பரப்பியதோ உண்டா? இல்லை இந்து மதத்தை இகழ்வது மட்டும் தான் உங்க திராவிடமா? வெளிநாட்டு மதங்களை தமிழர்களிடம் திணிக்கும் அடிமைகளை பற்றி திராவிடம் பேசுமா?

கள்ளன்/மறவன் -தேவர்; பள்ளி/படையாச்சி -வன்னியர்; பகடை/சக்கிலியர் -அருந்ததியர் ; சானான் -நாடார், கோனார் -யாதவர்,  இது போல பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், கடையன் - 6 உட்பிரிவுகளை இனைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று அரசானை கேட்கிறோம்.‘பள்ளன்’ என்பதை கூட ‘பள்ளர்’என்று மாற்ற மனமில்லை. ஆனால், கொள்கை மட்டும் பகுத்தறிவு, முற்போக்கு மண்ணாங்கட்டியாம். 

 

ஒரு எளிமையான விவசாயகுடியின் அடையாளத்தை கொடுப்பதில் கூட இந்த திராவிட கட்சிகளுக்கு என்ன தயக்கம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.