Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? கொந்தளிக்கும் ராமதாஸ்..!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்கு என்ன தான் மரியாதை? 

Is democracy happening in Tamil Nadu? Governor rule? Turbulent Ramadoss
Author
Tamil Nadu, First Published Oct 16, 2020, 10:05 AM IST

நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அழிக்கவில்லை. Is democracy happening in Tamil Nadu? Governor rule? Turbulent Ramadoss

இதுகுறித்து பாமல நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘’மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5%  இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்.Is democracy happening in Tamil Nadu? Governor rule? Turbulent Ramadoss

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்கு என்ன தான் மரியாதை?  தமிழ்நாட்டில்  நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக  விடை காணப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios