Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனாவா? இத்தாலியா? ஆய்வாளர்கள் நடத்தும் பட்டிமன்றம்.தீர்ப்பு என்னவாக இருக்கும்.!

கொரோனா வைரஸ் பிறப்பிடம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்னபி வருகிறது. சீனா நாட்டின் வுகான் மாநிலமா?இல்லை இத்தாலி நாட்டின் மிலன் மற்றும் தூரின் பகுதியா? என பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் தான் முதன் முதலில் கொரோனா தோன்றியதா? என்கிற ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
 
Is China the Origin of the Corona Virus? Italia? What the researchers say. !!
Author
Italy, First Published Jun 20, 2020, 10:37 PM IST

கொரோனா வைரஸ் பிறப்பிடம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்னபி வருகிறது. சீனா நாட்டின் வுகான் மாநிலமா?இல்லை இத்தாலி நாட்டின் மிலன் மற்றும் தூரின் பகுதியா? என பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் தான் முதன் முதலில் கொரோனா தோன்றியதா? என்கிற ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

Is China the Origin of the Corona Virus? Italia? What the researchers say. !!
உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமுடன் இந்த வைரஸ் பரவ தொடங்கி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  இதனால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் சீனாவை எதிரியாக நினைத்து வந்தன. ஆனால் இத்தாலியில் தான் முதன் முதலில் உருவாகியது என்று தற்போது தெரியவந்திருப்பதாக அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த தகவலால் சீனா தன் நாட்டின் மீது இருந்த கறையை கழுவிக்கொள்ளும் என்றே தெரிகிறது.

இத்தாலி நாட்டின் மிலன் மற்றும் தூரின் நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சீனாவில் வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்படுவதற்கு முன்பே வடக்கு இத்தாலியில் வைரஸ் பரவி வந்துள்ளது என ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

Is China the Origin of the Corona Virus? Italia? What the researchers say. !!

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை வடக்கு இத்தாலியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து 40 கழிவுநீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  இதில், இத்தாலிய தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் 18ந்தேதி மிலன், தூரின் நகரில் எடுத்த மாதிரிகளில் சார்ஸ் கோவி2 வைரஸ் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளது.இந்த ஆய்வு, இத்தாலியில் வைரஸ் பரவலுக்கான தொடக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவ கூடும் என அந்த அமைப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான கிஸ்செப்பினா லா ரோசா கூறியுள்ளார்.
  Is China the Origin of the Corona Virus? Italia? What the researchers say. !!
நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், கொரோனா வைரஸ் கழிவுநீரில் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பல நாடுகள் கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்ய தொடங்கி உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios