Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் இரும்பு மனிதர்.. 3வது முறையும் பிரதமர் மோடி தான்.. 70சதவீதம் மக்கள் கருத்து.. எடியூரப்பா ஆருடம்.!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் "வந்தே பாரத்" திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், முஸ்லீம்களின் ஒரு தரப்பின் நீண்டகால கோரிக்கையான முத்தலாக் முறையை ஒழித்தது, இந்து முஸ்லீம்களுக்கான பிரச்சனைக்கு முடிவுகட்டி ராமர் கோயில் பிரச்னையை முடித்து வைத்தது என பல முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார். 

Iron Man of India .. PM Modi for the 3rd time .. 70 per cent of people's opinion .. Yeddyurappa Aradum !!
Author
Karnataka, First Published Jun 1, 2020, 9:07 PM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் "வந்தே பாரத்" திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், முஸ்லீம்களின் ஒரு தரப்பின் நீண்டகால கோரிக்கையான முத்தலாக் முறையை ஒழித்தது, இந்து முஸ்லீம்களுக்கான பிரச்சனைக்கு முடிவுகட்டி ராமர் கோயில் பிரச்னையை முடித்து வைத்தது என பல முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார். 

Iron Man of India .. PM Modi for the 3rd time .. 70 per cent of people's opinion .. Yeddyurappa Aradum !!

அடுத்த முறையும் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் வரவேண்டும் என்று 70 சதவீத இந்தியர்கள் விரும்புவதாக கர்நாடக முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

  "ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் பிரதமர் மோடியை "இரும்பு மனிதர்" என்று அழைக்கிறேன்.நாட்டில் 70 சதவீத மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியே வர வேண்டும் என் விரும்புகின்றனர். அப்படி அவர் வந்தால் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைப்பார். இளைஞர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 

Iron Man of India .. PM Modi for the 3rd time .. 70 per cent of people's opinion .. Yeddyurappa Aradum !!

மோடி தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். அனைத்து மாநிலங்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார். தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வலிமை மிக்க தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். முத்தலாக் முறையை ஒழித்தது, வெளிநாட்டில் இருப்பவர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம், ராமர் கோயில் பிரச்னையை முடித்து வைத்தது என பல முக்கிய நடவடிக்கைகளை மோடி எடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டு வருகிறார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், இந்த பிரச்னையை கையாளுவது சாதாரண காரியம் அல்ல.பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி செயல்படுத்துகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios