ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

அமலாக்கத்துறை வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நவம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, உடல்நிலை பாதிப்பை குறிப்பிட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வயிற்று வலி பிரச்சனைகளால் ப.சிதம்பரம் அவதிபட்டு வருவதாகவும், வயிறு, குடல் சார்ந்த சிறப்பு மருத்துவம் அவருக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். மேலும், சிகிச்சைக்காக ப.சிதம்பரம் ஐதராபாத் செல்ல 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எய்ம்ஸ் மருத்துவருடன் இணைந்து குடும்ப மருத்துவரும் ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.