நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தேவையான அளவுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் இல்லை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது . கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது , இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக  மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது   ஆனாலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமெடுத்து வருகிறது, 

 இதனால்  ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது,  அதன் பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,  அத்துடன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீதும்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ,  

 

அப்பொருட்களை கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பவர்களை  கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார் .  தற்போது வரை மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு  திருப்தி அளிப்பதாக உள்ளது.  எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார் .  அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு  தடையின்றியும்  நியாயமான விலையிலும்  கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .