Asianet News TamilAsianet News Tamil

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய நிபுணர் குழு தீவிர ஆலோசனை.. ஓரிரு தினங்களில் முடிவு.

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்தை இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இந்தியாவில் இந்த மருந்துக்கு கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

Intensive consultation with the Central Expert Panel on the approval of the Govshield vaccine .. Results in a day or two.
Author
Chennai, First Published Jan 1, 2021, 4:41 PM IST

மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள  கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில்  கோவிஷீல்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுமா அல்லது அனுமதி கேட்டு விண்ணப்பிக்கபட்டுள்ள மேலும் மூன்று மருந்துகளுக்கும் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேளை மருந்துகளுக்கு அனுமதி கிடைத்து விட்டால் அடுத்த வாரத்திலேயே தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என கூறப்படுகிறது.

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் நடந்த மருந்து ஆராய்ச்சியின் விளைவாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே அமெரிக்க நிறுவனத்தின் பைசர், மாடர்னா ஆகியவற்றின் மருந்துகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, சீனாவின் இரண்டு கொரோனா தடுப்பூசி என மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. 

Intensive consultation with the Central Expert Panel on the approval of the Govshield vaccine .. Results in a day or two.

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்தை இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த கொடுக்கிறது. இந்தியாவில் இந்த மருந்துக்கு கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அதன் இறுதி கட்ட சோதனைகள் நடந்து முடிந்து, அதில் சுமார் 95% கொரோனாவுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்துவதற்காக கோவிஷீல்ட் நிறுவனம். மத்திய அரசிடம் அனுமதி கேட்டது விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்ட்  மருந்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டமும் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. 

Intensive consultation with the Central Expert Panel on the approval of the Govshield vaccine .. Results in a day or two.

மேலும் அதற்கான கூடுதல் தரவுகள் கேட்கப்பட்டுள்ளதால், தற்போது அந்த தரவுகளை கோவிஷீல்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அந்த குழு மத்திய சுகாதாரத்துறையிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை முறைப்படி அனுமதி அளிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் உடனே அடுத்த வாரத்திலிருந்தே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின், மற்றும் பைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios