Asianet News TamilAsianet News Tamil

கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் நேற்று 69,970 கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. 

Intensity of work to vaccinate the second installment of Covaxin .. Public waiting in long queues.
Author
Chennai, First Published Jul 23, 2021, 9:39 AM IST

கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இன்று சென்னையில் 200 தடுப்பூசிகள் ஒவ்வொரு மையத்திலும் போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரொனா  இரண்டாம் அலையின் பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் கொரொனாவை முற்றிலுமாக குறைக்க தடுப்புசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவி வருகிறது. 

Intensity of work to vaccinate the second installment of Covaxin .. Public waiting in long queues.

அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் நேற்று 69,970 கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதனை தேவைக்கு ஏற்றவாறு மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ள  நிலையில் சென்னைக்கு மட்டும் 42,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி சேர்த்துக் கொள்பவர்களுக்கு மட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு 100, தடுப்பூசிகளும், நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு 100 தடுப்பூசி என்ற விதத்தில் 200 தடுப்பூசிகள் போடப்படுகிறது.  அதேபோல, கோவிஷூல்டு தடுப்பூசி நேரடியாக போட்டுக்கொள்வர்களுக்கு 130, ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு 70 தடுப்பூசி என்ற விதத்தில் 200 தடுப்பூசி போடப்படுகிறது. 

Intensity of work to vaccinate the second installment of Covaxin .. Public waiting in long queues.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் தடுப்பூசி மையத்தில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வரை 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.  வரக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் முற்றிலுமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்திற்கு தற்போது வரையிலும்  1,91,54,730 தடுப்பூசி வந்திருக்கும் நிலையில் நேற்று வரையும் 1,88,23,296 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios