மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புற  காடுகளை உருவாக்கும் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 197-ல் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள் நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மியாவாக்கி நகர்ப்புற காடுகள் என்ற முறையினை பயன்படுத்தி அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி மியாவாக்கி என்னும் அடர்ந்த நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தின் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் 155 ராயலா நகர் இரண்டாவது பிரதான சாலையில், 10,000 சதுர அடி கொண்ட நிலத்தில் 6000 சதுர அடியில் 8.22 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சோழிங்கநல்லூர் மண்டலத்திற் குட்பட்ட வார்டு  197 மாதிரிப்பள்ளி சாலையிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2800 மரக்கன்றுகள் நடவு செய்து மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் திட்டத்தை ஆணையர் பிரகாஷ் தூக்கிவைத்து ஆய்வு செய்துள்ளார். 

இந்த மியாவாக்கி அடmf வனங்களில் பாரம்பரிய செடி வகைகளான ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லி, முல்லை, பவளமல்லி, பாரிஜாதம், இட்லிப்பூ, நந்தியாவட்டம், அலமாண்டா மூலிகை வகைகள், கற்பூரவள்ளி, பிரண்டை, தூதுவளை, துளசி, இன்சுலின் மரவகைகள், குண்டுமணி. பூங்கை, நாவல், கொடுக்காப்புளி,  செம்மரம், சில்வர் வுட், வில்வம், தான்றிக்காய், செண்பகம், மகிழம், மலைவேம்பு, புளிய மரம், மருதாணி, விளா மரம், குடை மரம், கொய்யா, வெள்ளை எருக்கம், பலா மற்றும் தேக்கு போன்ற மர வகைகள் கொண்ட அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.