இறந்துபோன புலம்பெயர் தொழிலாளியின் சடலத்தை அவரது மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் விட்டுச் சென்ற லாரி ஓட்டுநரின் மரத்துப்போன மனிதநேயச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும் சைக்கிள் லாரிகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல் சரக்கு வாகனத்தில் புலம்பெயர் தொழிலாளி தன் மனைவி மற்றும் 3குழந்தைகளுடன் சொந்த ஊரான ஆசம்கர்க்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

 
சரக்கு வாகனம் உத்திரபிரதேசம் கரேரா பகுதிக்கு வந்த போது பயணத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்தவர்.இறந்துபோனார்.தன் கணவர் இறந்தது தெரிந்ததும் மனைவி மக்கள் கதறி அழுதிருக்கிறார்கள். இவர்களின் அழுகுரல் கேட்டதும் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர்  சிறிது தூரம் சென்றதும் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து இறந்தவர் உடலை சாலையோரம் இறக்கி வைத்து விட்டு அவரது மனைவி 3குழந்தைகளையும் நடுரோட்டில் தனியாக விட்டுச் சென்றிருக்கிறார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரேரா பகுதி தாசில்தார் கவுரி சங்கர் பிர்வா, மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் தெரிவித்து விட்டு சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும், குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சடலத்தை அவரது மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் விட்டுச் சென்ற லாரி டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மனிதநேயத்தையும் மனிதாபிமானத்தையும் அழித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.