ஆம்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வில்வநாதனின் செருப்பை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தக் கட்சியின் ஊராட்சி செயலாளர் சுமந்துண்டு போனது, சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர் இந்த வில்வநாதன். அப்போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய தலைமை கொடுத்த பணத்தில் 50 லட்சத்தை, தேர்தல் பொறுப்பாளர் ஒருத்தர் அப்படியே வைத்துக் கொண்டார். இதை வில்வநாதன் தட்டிக் கேட்க இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

 

அந்த பிரமுகர், வரும் சட்டசபை தேர்தலில் ஆம்பூர் தொகுதிக்கு குறி வைத்திருக்கிறார். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ., வில்வநாதனுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். அதனால் அவர் பெயரை, 'டேமேஜ்' செய்ய செருப்பு விவகாரத்தை அந்த பிரமுகர் ஊதி பெரிதாக்கி விட்டார் என அந்தக் கட்சிக்குள்ளயே பேசிக் கொள்கிறார்கள்.