என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்றும், தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்றும், தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு 
இல்லை என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில நாட்களுக்குமுன் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து 
நிறுத்தியதால், ஆத்திரமுற்ற பாஜக ஹெச்.ராஜா, தன் நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், மோசமான 
வார்த்தைகளை பேசி உளறிக் கொட்டிவிட்டார். ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்றும், 
கோயில் இருக்கு, இடிபாடா இருக்கும் என்றும் பேசியிருந்தார்.

அவரது பேச்சால், காவல் துறை அதிகாரிகள், நீதித்துறையினர், அறநிலையத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் 
ஏராளமான இடங்களில் அவருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது., சில புகார்களின் அடிப்படையில், ஹெச்.ரஜாவை பிடிக்க 2 
தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா வரும் அக்டோபர் 3 ஆம் தேதி 4.30 மணிக்கு ஆஜராக 
வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக, திருவாரூர், தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் 
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனைத் 
தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் மனுவும் கொடுத்திருந்தனர். நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய 
ஹெச்.ராஜாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

மதுரை, அழகர்கோயில் பணியாளர்கள் மற்றும் இணை ஆணையர் தலைமையில் சுமார் 93 அதிகாரிகள், ஹெச்.ராஜா மீது போலீசில் 
புகார் கூறியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், என்னை கைது செய்ய தனிப்படை 
அமைக்கப்பட்டது பற்றி தெரியாது என்றும் தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 
மயிலாடுதுறை, திருக்கடையூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆகம விதிகளைக் காரணம் காட்டி, 
தமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரம் நடத்த தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியா என்றும், ஆகம விதிகளில் தலையிட இந்து 
அறநிலையத்துறைக்கு உரிமையில்லை என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.