individual candidate jignesh mewani victory in vadgam
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட தலித் சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், இதுவரை பாஜக 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 50 தொகுதிகளில் பாஜகவும் 44 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கிறது.
தலித் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் வட்காம் தொகுதியில் பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சக்ரவர்த்தி விஜய் குமாரை தோற்கடித்து தலித் சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆனால், சுஜர்பூன் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமால் தோல்வியடைந்துள்ளார்.
இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், பாஜகவிற்கு பரவலாக எதிர்ப்பு இருப்பதையும் அறிய முடிகிறது.
