Indira Gandhi covered her nose in Gujarats Morbi But she had a reason A tragedy
ஏழை மக்கள் அதிகம் இருக்கும் மூர்பி பகுதிக்கு இந்திரா காந்தி வரும்போது, மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். நிலபிரபுத்துவத்துவத்துடன்தான் இன்னும் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4 , 9 ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் துணைத்தலைவர்ராகுல் காந்தியும் அனல்பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர்.
குஜராத்தின் மார்பி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-
காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலையில் உள்ளது என்பது ஒரு உதாரணம் கூறுகிறேன். மோர்பி பகுதிக்கு இந்திரா காந்தி வந்தபோது அவர் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் ‘சித்ரலேகா’ பத்திரிகையில் வந்துள்ளது நினைவு இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த தெரு மணம் வீசுகிறது. மனிதநேயத்தின் மனம் வீசுகிறது என்றார்.
ராகுல் ஏன் கோயிலுக்கு செல்கிறார்?
ராகுல் காந்தி சோம்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தது குறித்து மோடி பேசுகையில், “ சர்தார் படேல் இல்லாவிட்டால், இங்கு சோம்நாத் கோயில் இல்லை. ஆனால், இங்கு சிலர்(ராகுல்) சோம்நாத் கோயிலில் இப்போது வழிபாடு நடத்துகிறார்கள். நான்கேட்கிறேன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சோம்நாத் கோயில் கட்டுவதைவரும்பவில்லை தெரியுமா.ராஜேந்திர பிரசாத் இந்த கோயிலை திறந்து வைக்க விரும்பவதை நேரு விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.
