அசாதுதீன் ஒவைசியின் கட்சியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி ஷகீல்கான் பச்சிளம் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் 6 ஆம் தேதி ஒரு சிறு பட்டியலின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைதராபாத்தில் உள்ள சதர்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி, போக்ஸோ சட்டம் எஸ்சி எஸ்டி (பிஓஏ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். 

ஷகீல்கான் கமல் நகரில் வசிப்பவர் என்றும், மலக்பேட்டை தொகுதியை சேர்ந்த இவர் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி என்றும் தெரிய வந்தது. அதே பகுதியில் வசித்து வந்த மைனர் சிறுமியான பட்டியலின சிறுமியை கடத்திக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.  இருப்பினும், சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் அடைப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியின் பிறப்பு சான்றிதழ்களையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் போலீசிடம் வழங்கினர்.