குடியுரிமை திருத்த சட்டம்,370வது பிரிவு நீக்கம் இவைகளையெல்லாம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.இதில் எந்த முடிவுகளையும் வாபஸ் பெற போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.


வாரணாசி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்..., "
      நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கமாக இருந்தாலும் சரி, குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, இவை நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடியவை. இந்த முடிவுகள் எடுப்பதற்காக நாடு நீண்ட காலமாக காத்திருந்தது.எனவே, அனைத்து பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி, நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து உறுதியாக இருப்போம். இந்த முடிவுகளை வாபஸ் பெறப் போவதில்லை.

ராமர் கோவில் கட்டுமானத்துக்காக ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அது வேகமாக செயல்படும். நாட்டின் வளர்ச்சியை நோக்கியே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது, மூன்றாம்நிலை, நான்காம் நிலை நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அங்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பகுதி, இந்த நகரங்களுக்கு செலவிடப்படும். ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட சுற்றுலாவும் முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.