Asianet News TamilAsianet News Tamil

உத்தரவுக்காக காத்திருக்கும் இந்திய ராணுவம்...! 40 நிமிடத்தில் கதையை முடிக்க திட்டம்...?

அணு ஆயுத பயன்பாட்டை பொருத்தவரையில் முதலில் பிரயோகம் செய்வதில்லை என்பது தான் நமது கொள்ளையாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்கால சூழல்களை பொருத்து இந்தியா நடந்துகொள்ளும் என அவர் எச்சரித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இக்கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

indian army waiting for order
Author
Delhi, First Published Aug 16, 2019, 4:37 PM IST

இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்துவது என்பது  எதிர்கால சூழ்நிலைகளை பொருத்து அமையும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக தெரிவித்துள்ளார்,அவரின் இக்கருத்து சர்வதேச அளவில் இந்தியாவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.indian army waiting for order

அணு சக்தி நாடுகள் வரிசையில் இந்தியாவிற்கு தனி மரியாதையும் அந்தஸ்தும் உண்டு, இந்தியா தன்னுடைய அணு சக்கி வல்லமை என்ன என்பதை பல முறை தோதனைகள் நடத்தி உலக நாடகளை அதிரவைத்துள்ளது, என்பதுதான் அதற்கு காரணம் . கடந்த 1998 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் பொக்ரானில் அணு வெடிப்பு சோதனையை நடத்தி உலகையே மிரளவைத்தார். அன்றுமுதல் இந்தியா அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்தது. இதுவரை இந்தியா அணு சக்தி சோதனையை ஒருமுறையோ இருமுறையோ இல்லை 6 முறைக்குமேல் சோனை நடத்தியுள்ளது அதன் மூலம், சர்வதேச அளவில் அதிசக்திவாய்ந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது.indian army waiting for order

ஆனால் சோதனை நடந்தி ஒவ்வொரு முறையும் அணு ஆயுதம் என்பது இந்தியா இராணுத்திற்காகவும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே தவிற யாரையும் அச்சுறுத்த அல்ல எனவும், எந்த சூழலிலும் இந்தியா அணுகுண்டை முதலில் பிரயோகம் செய்யாது எனவும் இந்தியாவின் மீது தாக்குதல் நடப்பட்டால் அடுத்த நொடியில் இந்தியா தாக்கும் என்றும் அறிவித்து அமைதியை கடைபிடித்து வருகிறது. இந்தியா. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுவரும் பாகிஸ்தான் சினாவின் உதவியுடன் ஐநா மன்றத்தில் இந்தியாவின் மீது புகார் தெரிவித்துள்ளதுடன், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு வற்புறுத்தி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சினா உள்ளிட்ட நாடுகள் இநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்னர் அதில் எடுக்கும் முடிவை பொருத்து இந்தியாவுக்கு நிர்பந்தம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. indian army waiting for order

இந்தியாவை அணுசக்தி நாடுகளின் பட்டியலில் சேர்த்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சினா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர், ஆனால் அனைத்தையும் இந்தியா எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார். indian army waiting for order

அத்துடன் அணுஆயுத நாடான இந்தியா மிகவும் பொருமையுடன் நடந்து வருகிறது என்றார், எத்தனைபேர் சேர்ந்து வந்தாலும் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று கூறிய ராஜ்நாத் சிங். அணு ஆயுத பயன்பாட்டை பொருத்தவரையில் முதலில் பிரயோகம் செய்வதில்லை என்பது தான் நமது கொள்ளையாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்கால சூழல்களை பொருத்து இந்தியா நடந்துகொள்ளும் என அவர் எச்சரித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இக்கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios