* ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஆதாரம் இல்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அன்று, அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கேட்டிருந்தேன். ஆனால் தரப்படவில்லை.: தீபாவின் கணவர் மாதவன் புகார். (மாதும்மா மறுபடியும் மறுபடியும் சொல்றோம், அந்த வீடியோவுல பாட்டு, பைட்டு, காமெடி சீன்ஸ்லாம் வராது. நீங்க நினைக்கிற மாதிரி அதை ஃபேஸ்புக்ல ஏத்தி லைக்ஸ்லாம் வாங்க முடியாது! புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்)

* வரும் ஏழாம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், எட்டாம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விசாரணைக்கு கமிஷன் அழைத்துள்ளது. ஆனால் அன்று என்னால் ஆஜராக முடியாததால், அவர்களை 10ம் தேதி விசாரணைக்கு அழைக்கும்படி கேட்டுள்ளேன்: சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன். (ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு ஆகாது பாஸு!)

* இந்தியன் - 2வில் நடிக்க இருக்கும் கமல்ஹாசன் இளமை, முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். இதில் முதுமையான தோற்றத்தை கொண்டு வர ஹாலிவுட் கலைஞர்கள் வர உள்ளனர்: செய்தி. (இருக்குற முதுமையை இன்னும் அதிகமாக மேக் அப் போடுவீங்க, சரி! இல்லாத இளமையை எப்படிடா கொண்டு வருவீங்க? அடேய் பதில் சொல்லிட்டுப் போங்கடா...)

* பெண்கள் வந்ததால் நடையை அடைத்து பூஜை நடத்தியது விசித்திரமானது. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தை அவமதித்த தந்திரி, பதவி விலகுவதே நல்லது: கேரள முதல்வர் பினராயி விஜயன். (அது சரிதான். ஆனா முல்லைப் பெரியார் விஷயத்துல நீதிமன்றம் சொன்னதை கேட்காம அவமதிக்கிற நீங்க எப்ப  சேட்ட பதவி விலகுறீங்க? இத நாங்க கேட்கலை, பக்தாள்ஸ் கேட்கிறா, பதில் சொல்லுங்கோ.)

* பாலா இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமா உலகைப் பற்றிய புரிதல் முன்பை விட இப்போது எனக்கு அதிகமாகி இருக்கிறது. அதனால்தான் ஏற்கனவே பணியாற்றிய இயக்குநருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்: தன்ஷிகா (சர்தான்! மதுரைக்காரய்ங்க நம்ம தலையில ஓங்கி குட்டினா ஒத்த தலைவலி ஓடிப்போயிடும், முதுகுல குத்துனா வாயு பிடிப்பு விலகிடுமுன்னு  இந்தப் புள்ளைக்கு யாரோ வர்ம வைத்தியம் மத்தி சொல்லிக் கொடுத்திருக்காய்ங்க. அதான் பாலாட்ட நடிக்க விருப்பப்படுது.)