பிரதமர் மோடி அவர்களின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 2 போயிங் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. எதிரிநாட்டு ரேடார்களை செயலிழக்க வைக்கும் திறன் கொண்டதாக இந்த புதியரக போயிங் விமானங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

  

சர்வதேச அரங்கில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. சுமார் 130 கோடி மக்களின் ஒப்பற்ற பிரதமர் என்ற முறையில்  இந்திய பிரமருக்கு  அயல்நாடுகளில் மதிப்பும் மரியாதையிலும் எப்போதும் குறைவிருப்பதில்லை. அது மட்டுமின்றி, இந்திய பிரதமர் மோடி மற்ற நாட்டு பிரதமர்களை காட்டிலும் மக்கள் செல்வாக்குள்ள தலைவராகவும் இருந்து வருகிறார். காரணம் அவரின் வெளிநாட்டு சுற்றப்பயணங்கள், மற்றும் அவரின் ஆக்ரோஷமான உரைகள், எதிலும் அவர் எடுக்கும் தீர்கமான முடிவு,  மற்றும்  சர்வதேச  தலைவர்களுடன் அவரின் அனுகுமுறைகள். என   பலதரப்பட்ட மக்களையும்  கவரக்கூடியவராக அவர் இருப்பதே இதற்கு காரணம். புகழ்மிக்க தலைவர் என்ற வரிசையில் அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்து பிரதமர் மோடி இருக்கிறார் என்பதற்கு சமீபத்தில் ஹூஸ்டனில்  நடந்த மோடி ஹவுடி நிகழ்ச்சியே சாட்சி.

இப்படி பலம் பொருந்திய பிரதமராக உள்ள மோடி, அவர்களின் பாதுகாப்பும் , மற்றும் அவரின் பயணங்களுக்காக பயன்படுத்தும் விமானங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை, என்பது அனைவருக்கும் தெரியும் . இந்திய குடியரசுத்தலைவர் முதல்  பிரதமர் வரை ஏர் இந்தியாவிற்கு சொந்தான விமானத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி இந்தியாவிற்கான அந்தஸ்த்தை பறைசாற்றும்  வகையில் பிரமர், மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் புதிய தெழில் நுட்பத்துடன் கூடிய அமெரிக்க அதிபர் பயன்படுத்தக் கூடிய போயிங் 777 ரக விமானங்களை இந்தியாவும் வாங்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது பயண்படுத்தி வரும்  ஏர் இந்தியா விமானத்திற்கு ஆகும் மெயின்டனன்ஸ் செலவு அதிகரித்து செல்வதும் 

இதற்கு ஒரு காரணம். இந்தரக விமானங்களுக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.  புதிதாக தயாரிக்கப்பட்ட உள்ள விமானம்  எதிரி நாட்டு ரேடார்களை  செயலிழக்கச் செய்வதுடன்  அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.  அத்துடன் சுயபாதுகாப்புக்காக ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வசதிகளும் விமானத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய இரண்டு  விமானங்களின் மதிப்பு சுமார் 1, 361 கோடி என்ன தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமானத்தைப்போன்றே இந்த விமானங்கள் இருக்கும் என்றும். அதே பாதுகாப்பு அம்சங்கள் பொருந்தியதாக   வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப் புதிய  விமானங்கள் அடுத்த ஆண்டு ஜீன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.