போலீஸ் துணை கமிஷனர்களை நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிப்பதால், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலீஸ் துணை கமிஷனர்களை நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், '' போலீஸ் துணை கமிஷனர்களை , நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிப்பதால், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு நியமிப்பது செல்லுமா? தனி அமர்வு அமைத்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்'' என தெரிவித்தார்.