Asianet News TamilAsianet News Tamil

ஏழை - எளிய மக்கள், விவசாயிகளுக்கு வாரி வழங்கத் திட்டம்... உலகிற்கே நம்பிக்கை தரும் மோடி..!

உலகம் என்பது ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். 

India is the only family .... We don't always have selfishness ... Modi hopes for the world
Author
india, First Published May 12, 2020, 9:04 PM IST

உலகம் என்பது ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். 

ஊரடங்கு குறித்து முதலமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ’’இந்திய வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டது. ருளாதாரம்,  உட்கட்டமைப்பு, சிறப்பு திட்டங்கள் மனிதவளம் உற்பத்தி தேவை தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. பொருளாதார திட்டங்கள் மூலம் ஏழை -எளிய மக்கள், விவசாயிகள் நடுத்தரக் குடும்பங்கள் பயன்பெறும். இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது. காதி, கைத்தறி பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். மாநிலங்களில் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு முழு முடக்க முடிவு செய்யப்படும். கொரோனா பாதிப்பை சமாளிக்க நாட்டில் உள்ள துறையே கைகொடுத்திருக்கிறது. இந்தியா தயாரிக்கும் இத்தகைய பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்கின்றனர். India is the only family .... We don't always have selfishness ... Modi hopes for the world

சிறப்பு திட்டங்கள் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும் நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%  கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு வழங்கப்படும். ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்திருக்கிறது. உலகம் என்பது ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இல்லை. உலகுக்கு இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பரிசுதான் யோகா யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் 130 கோடி இந்தியர்களும் உறுதி இருக்க வேண்டும்.

India is the only family .... We don't always have selfishness ... Modi hopes for the world

இந்திய பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் 20 லட்சம் கோடிக்கு  பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் ஒரு வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலகளாவிய முடக்கம் என்பது உலக மக்கள் இதுவரை காணாதது. உலகம் இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் சின்னாபின்னமாக்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு  3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது. அரசுடன் போராடி உயிர்களை காக்க வேண்டும். முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் கொரோனா வைரஸுடன் போராடி உயிர் இழப்பை தவிர்க்க வேண்டும். கொரோனா  வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது. நாம் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த நான்கு மாதங்களாக குரவை விரட்ட இந்தியா பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்புக்கு பிந்தைய உலக இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.

India is the only family .... We don't always have selfishness ... Modi hopes for the world

உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனாவுக்கு முன் இந்தியாவில் பிபிஏ கிட்டுக்கள் தயாரிப்பு கிடையாது. ஆனால், இப்போது தினசரி இரண்டு லட்சம் உருவாக்குகிறோம். கொரோனா பாதிப்பு இன்னும் பல காலங்கள் இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாரையும் சார்ந்து இல்லாத வகையில் நம் நாட்டை மாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக உடல் வலுவடைய வேண்டும். கொரோனா பாதிப்பை ஏழை எளிய மக்கள் மிக தைரியமாக கையாண்டு வருகிறார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios