இந்தியாவுடன் நேரடியாக உரச இயலாமல் எல்லையில் மோதி இயலாமையால் ரத்தம் கொதித்து வருகிறறது சீனா. இதற்கு காரணம் இந்தியாவின் சமீபத்திய எழுச்சி.  

இந்தியா, 1947-ல், சுதந்திரம் அடைந்து இருந்தாலும், தனது நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள் கட்டமைப்பு செய்யும் முயற்சியை பிரதமர் மோடி 2014-ல் பதவியேற்ற பிறகு தான் தொடங்கியது. 1947-ல் இருந்து இத்தனை ஆண்டுகள் எல்லைப் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட கட்டமைப்புக்களை செய்து ஸ்திரத் தன்மையை எட்டவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

அதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இந்திய பூர்வீக மத மக்களின் நம்பிக்கைக்கு உரிய கைலாஷ் யாத்திரைக்கான சாலை அமைக்கப்பட்டது. இந்தியாவுக்கு கடல் பரப்பிலான அண்டை நாடுகளோ அல்லது நிலப்பரப்பிலான் அண்டை நாடுகளோ எதுவென்றாலும் எல்லை வரையறை தேவை.
1962-ல் சீனாவுடனான யுத்தத்தில் பெரும்பகுதியை இந்தியா இழந்தது. அரை நூற்றாண்டை தொடப் போகும் சூழலில் மீண்டும் இந்தியாவுடன் யுத்தம் செய்ய சீனா முயற்சி செய்கிறது. சீனா எந்த நாட்டுடனும் எல்லைப் பகுதிகளில் முறையான கோடுகள், கோட்பாடுகளை வகுத்துக் கொள்வது இல்லை. குறிப்பிட்ட காலக் கெடு விதித்து எண் திசைகளிலும் தனது எல்லை மீறலை எல்லா நாடுகளிலும் செய்து பார்க்கும்.

கொரோனா வைரஸ் பரப்புதலை சீனாதான் செய்தது என்ற உண்மையை மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகள் புலப்படுத்தி விட்டது. இதனால் சீனாவில் கம்பெனிகள் நடத்தும் வெளிநாட்டினரில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை நாடி வருகின்றனர். முற்றிலும் தளர்வில்லாத ஊரடங்கு காலத்தில் கூட பிரதமர் மோடி அவர்கள் மாநில முதல்வர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல் செய்தார். ஆனால், அப்படி வரும் வாய்ப்புகளை இந்தியா, எக்காலத்திலும்  பெற்று விடக்கூடாது என்பது தான் சீனாவின்  உறுதியான எண்ணம்.

சீனா முக்கியமாக இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் பகுதிகளில் உரிமை கொண்டாட முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. சீனாவுக்கு உலகச் சந்தையில் உற்பத்திப் பெருக்கத்திற்கு போட்டியான நாடாகவும், சீனாவை விட தரமான பொருட்களை தயாரிக்கும் திறனோடும் இருப்பது இந்தியா. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சமீப காலத்தில் உலக நாடுகளின் நன் மதிப்பை இந்தியா பெறுவதையும் சீனாவால் ஏற்க இயலவில்லை. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுய சார்பு பொருளாதாரம் குறித்த தனது உரையில் நமது உற்பத்தியே நமது பயன்பாடாக இருக்க வேண்டும் என்று கூறியதும் சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

இந்தியாவுக்கு எதிரான நிலைக்குத்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது பாகிஸ்தானியருக்கு தெரிகிறதோ, என்னவோ ஆனால் இந்தியா முழுமையாக  பாகிஸ்தானைப்  போல சீனாவுக்கு விட்டுக் கொடுத்தால் ஒரு வாரத்தில் பாகிஸ்தான் காணாமல் போய்விடும். சீனா இதே தந்திரத்தில் தான் இலங்கைக்கு உதவி செய்வது போல்  பல்லாயிரக்கணக்கான சீனர்களை இலங்கைக்குள் இறக்கியது. மோடி பிரதமர் ஆன பிறகு, பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிறகு தான் இலங்கை சூழல் மாறியது.

ஜனநாயக மாண்பு இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆள்வதால்தான் சீனா தன் மக்களின் மீதே கொரோனா வைரஸ் எனும் bio weapon யுக்தியை ஆய்வு செய்திருக்கிறது எனும் எண்ணம் உலக அரங்கில் தோன்றுகிறது. வெகு குறுகிய கால கட்டத்தில் இந்தியாவின் அபரிமிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயர்ந்த விதம், எளிதில் தொழில் தொடங்க உள்ள நாடுகளின் பட்டியலில் வேகமான முன்னேற்றம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி எனும் ஒற்றை மனிதரின் மந்திரச் சொல்லுக்கு உலகமே சேர்ந்து தலையாட்டும் விதம், ஆகிய இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாமல் தான் எல்லையில் ஏதாவது வால் ஆட்டி, புதிதாக இந்தியாவிற்கு வர உள்ள / தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒரு வித சலிப்பைக் கொடுத்து அவர்களை இந்தியாவிற்கு  வர விடாமல் செய்ய வேண்டும் என்பதன் வெளிப்பாடே இது போன்ற செயல்பாடுகள். இந்தியாவின் தலைமையில், உலக நாடுகள் இணைந்து, சீனாவின் சீண்டும் குணத்தை கட்டுப்படுத்தும் நாள், வெகு அருகாமையில் தான் உள்ளது’’ என்கிறார் ஏ.எம்.கே. மணி வண்ணன்.