Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் பொற்காலம் தொடங்கி விட்டது... மக்களே என்னை நம்புங்கள்... பிரதமர் மோடி உருக்கம்..!

என்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என மோடி நாட்டு மக்களுக்கு மோடி கடிதம் எழுதி உள்ளார். 
 

India is golden age has begun ... people believe me modi letter
Author
Delhi, First Published May 30, 2020, 10:22 AM IST

என்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என மோடி நாட்டு மக்களுக்கு மோடி கடிதம் எழுதி உள்ளார். 

நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பாஜக இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மோடி இரண்டாவது முறைாயக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

 India is golden age has begun ... people believe me modi letter

அந்தக் கடிதத்தில், “நாடு ஒரு வரலாற்று திருப்பத்தினை ஏற்படுத்தி வேகமாக முன்னேறி வந்தது. ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். கொரோனா தொற்று நோய் தடுப்பில் இந்தியா எடுத்திருந்த சிறப்பான முடிவுகளை போல, பொருளாதார மறு தொடக்கத்திலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணதாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் இக்காலகட்த்தில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சைக்கிள் மூலமாகவும், வெறும் கால்களுடன் நடந்தும், லாரிகளில் பயணித்தும் சென்றடைகின்றனர். ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதன் காரணமாக இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

India is golden age has begun ... people believe me modi letter

நம் நாடு பல எதிர்ப்புகளையும், சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன. நான் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இரவும், பகலும் உழைக்கின்றேன். என்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என மோடி குறிப்பிட்டுள்ளார்.India is golden age has begun ... people believe me modi letter

சர்வதேச அளவில் இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தப்படமாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவிற்கு ஒரு பொற்காலம் தொடங்கியது. பல காலகட்டங்களுக்கு பிறகு மக்கள் முழு பெரும்பான்மையுடன் முந்தைய ஆட்சியிலிருந்த அதே கட்சிக்கு வாக்களித்திருந்தனர். சாதாரண காலகட்டங்களில் நான் உங்கள் மத்தியில் இருந்திருப்பேன். ஆனால், இது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நேரம். எனவே இந்த கடிதத்தின் மூலமாக உங்கள் ஆசீர்வாதங்களை நான் தேடுகின்றேன்.“ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios