Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!! தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை உயர்கிறது..!!

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 5 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என கொரனோ கட்டுப்பாட்டு குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் . இந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,  

India has one shocking news , icu treatment number increasing
Author
Delhi, First Published May 25, 2020, 1:01 PM IST

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 5 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என கொரனோ கட்டுப்பாட்டு குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் . இந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,  நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கிட்டதட்ட 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  உலக அளவில் 55 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது,  இந்தியாவிலும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வரும் நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  39 ஆயிரத்தை  தாண்டியுள்ளது ,  சுமார் 4024  பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.  

India has one shocking news , icu treatment number increasing

சுமார் 57 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் , 77 ஆயிரத்து 304 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சுமார் 8,986 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,  இது மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் இந்தியாவில் நோய் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினரும் , கொரோனா கட்டுப்பாட்டு குழு தலைவருமான டாக்டர் வி.கே பால்,  இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவிய சமயத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் எந்த மருத்துவமனையும் இல்லை , ஆனால் இப்போது விரிவான வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம் .கொரோனா நோயாளிகளுக்கு என்று பிரத்தியேகமாக சிகிச்சை அளிப்பதற்கு 1093 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன .  இத்துடன் 2 ஆயிரத்து 402 சுகாதார மையங்கள் ,  7 ஆயிரத்து 13 கொரோனா நோயாளிகள் கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . 

India has one shocking news , icu treatment number increasing

இந்த மருத்துவமனைகளில் நேரடியாக சிகிச்சை அளிக்க ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 306 படுக்கைகள் உள்ளன .  அவற்றில் 31 ஆயிரத்து 250 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகும் , கொரோனா நோயாளி கவனிப்பு மையங்களில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ளன, மொத்தத்தில் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து 9 லட்சத்து 74 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.  ஒரே நேரத்தில் இத்தனை எண்ணிக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் ,  அதேநேரத்தில் கொரோனா நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.  80%  பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே குணமடைந்து செல்கின்றனர் .  நாட்டில் தற்போது நோயாளிகள் குணமாக்குதல் விகிதமும் 41 சதவீதமாக உள்ளது,  நாட்டில் இதுவரை மொத்தம் 28 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios