அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா.

2002, 2010 ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ல் நியூசிலாந்தில் நடைப்பெறவுள்ள யு-19 உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பதினோறாவது ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் ஜனவரி 13 அன்று நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறுகிறது.

பிப்ரவரி 3-ல் இறுதிப் போட்டி நடைபெறும். மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, கடந்தமுறை (2016) இரண்டாம் இடம் பிடித்தது என்பது கொசுறு தகவல்.

இந்தப் போட்டியில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 அன்று தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கவுள்ளது இந்தியா.