Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி... கட்சி அங்கீகாரத்தை இழக்கிறார்கள் தோழர்கள்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த இரு வெற்றியும் கூட தமிழகத்தில் திருப்பூர், நாகை தொகுதிகளிலிருந்து கிடைத்தவை. 

India communist party lose its National party status
Author
Delhi, First Published May 30, 2019, 7:44 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. India communist party lose its National party status
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த இரு வெற்றியும் கூட தமிழகத்தில் திருப்பூர், நாகை தொகுதிகளிலிருந்து கிடைத்தவை. கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அக்கட்சிக்கு ஓரிடமும் கிடைக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே அக்கட்சி வ்ற்றி பெற்றது. இந்த முறை குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருந்தால், பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஆனா, இரு தொகுதிகளில் மட்டுமே வென்றதால், அக்கட்சிக்கு சிக்கல் உண்டாகி உள்ளது.

India communist party lose its National party status
ஓர் அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள  நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தேர்தல்களில் குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 4 பேராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்து பறிபோகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.India communist party lose its National party status
இதுகுறித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி அந்தஸ்தை இழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி எங்கள் கட்சிக்கு தேசிய அளவில் உள்ள செல்வாக்கை தேர்தல் ஆணையம் ஆராயும். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சாதகமான முடிவை அறிவிக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios