அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகை இனவெறிப்போராட்டம் என அமெரிக்காவே கலவர பூமியாக வெடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய சீன எல்லை ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கின்றார்.

1962-ல் இதுபோன்ற ஒரு எல்லைப் பிரச்னையையொட்டி இந்தியா-சீனா போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 2017-ல் இது போன்ற ஒரு எல்லை பிரச்னை மூன்று மாதங்கள் வரை உரசலாக நீடித்தது.

அமெரிக்கா மட்டுமல்லாது, ஐரோப்பாவில்கூட சில நாடுகளில் ஜார்ஜ் பிலாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கிறது.   சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் லடாக் எல்லை பிரச்னை குறித்து சுமார் 25 நிமிடம் தொலைப்பேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள் ஆனால், இந்த கலந்துரையாடலின் முடிவாக மேற்கொள்ளப்பட்ட விசயங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

கடந்த வாரம் ட்ரம்ப் இந்திய, சீன எல்லை பிரச்னையில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இந்திய அரசு இதற்கான அவசியத்தினை மறுத்துவிட்டது, இந்த எல்லை பிரச்னை குறித்து இந்தியப் பிரதமருடன் தான் பேசியதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதையும் இந்தியா மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, லடாக் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. மேலும், “தற்போது இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையை தீர்க்க சீனா, விதிமுறைகளை மதிக்க வேண்டும். அதனுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை மற்றும் இதர வழிகளை பயன்படுத்த வேண்டும்" என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எலியட் ஏங்கல் சமீபத்தில் கூறியிருந்தார்.

லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளில் இந்தியா வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொள்ள சீன ராணுவம் குறுக்கீடு செய்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் சீன ராணுவத்தின் தலையீட்டினால்தான் உருவானது என்பதை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதே சீனா தான் என்று அமெரிக்கா அடிததத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் குறித்து சரியான தகவல்களை அமெரிக்காவிற்கு சொல்லாமல் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதி நிறுத்தினார் டிரம்ப்.அதன் பிறகு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டதாக  அறிவித்தார் டிரம்ப்.சீனா எதிராக களமிறங்கி இருக்கிறது அமெரிக்கா. கொரோனா வைரஸ் பிரச்சனையில் உலக நாடுகள் சீனா மீது கொலை வெறியில் தான் இருக்கிறது. ஜப்பான் அமெரிக்கா பிரான்ஸ் ஸ்பெய்ன் போன்ற நாடுகள் சீனாவின் மீது தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்களின் பகை இந்தியாவிற்கு தொழில் வளம் பெருக ஏதுவாக அமைந்துள்ளது தான் சிறப்பானது.