பொருளாதார சுணக்கம் எதிரொலி: தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறதா?- மத்திய அமைச்சர் சூசுகமான பதில்
நாட்டின் பொருளாதார சுணக்கம், வளர்ச்சிக் குறைவு போன்றவற்றை சீரமைக்கும் நோக்கில் தனிநபர் வருமானவரி விலக்கை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்த பரிசீலிக்கும் எனத் தெரிகிறது
வரி விகிதம் தொடர்பாக உரு வாக்கப்பட்ட பணிக் குழு மத்திய அரசிடம் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பரிந்துரையால், அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதேபோல், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீதமும் வரி விதித்து மாற்றலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஆண்டு வருமானம் உடைய வர்களுக்கு 30 சதவீத வரியும் ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 35 சத வீத வரியும் விதிக்க வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த வாரம் நிறுவனங்களுக் கான நிறுவன வரி 30 சதவீதத் தில் இருந்து 22 சதவீதமாக குறைக் கப்பட்டது. புதிதாக தொடங்கப் படும் உற்பத்தி நிறுவனங்களுக் கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப் பட்டது. இந்நிலையில் தனிநபர் வருமான வரியை குறைப்பதன் மூலமே நுகர்வை அதிகரிக்க முடியும் என்ற நிலையில் தனி நபருக்கான வருமான வரியை குறைக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறுகையில் “ சரியான நேரம் வரும்போது வருமானவரி விலக்கை உயர்த்துவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு முன் வருமானவரி விலக்கை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி இருக்கிறது எதிர்காலத்தில் இதுபோன்ற தேவை ஏற்பட்டால் நிச்சயம் மத்திய அரசு உயர்த்தும்” எனத் தெரிவித்தார்