income tax raid in namathu mgr
ஜெயா டி.வி. அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக அம்மா அணிக்கு சொந்தமான நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்திலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக மற்றும் ஆட்சி தொடர்பான விபரங்களை ஜெயா டி.வி.ஒளிபரப்பி வந்தது. அவரது மறைவுக்குப்பின் ஜெயா தொலைக்காட்சி டி.டி.வி.தினகரன் அணியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இளவரசியின் மகன் விவேக் ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார் . எடப்பாடி பழனிசாமி சசிகலா அணியில் இருந்தது பிரிந்த பின் ஜெயா டி.வி. யில் அரசுக்கு எதிரான செய்திகள் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தின் அருகே உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
6 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பத்திரிக்கை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
