சென்னையில் ஒப்பந்ததாரர் வீடு உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர்  இன்று சோதனை  நடத்தினர். பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் சபேசன் . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை செய்து வந்தார்.

 இவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.15 கோடி பணத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். சபேசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் சேலம் அருகே உள்ள தம்மம்பட்டியில் உள்ள நகை கடைஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.