Asianet News TamilAsianet News Tamil

கெத்தாக வந்தவரை வெறும் கையோடு திருப்பி அனுப்பிய நீதிமன்றம்... பதவி பறிபோகும் பயத்தில் கார்த்தி சிதம்பரம்..!

இந்த வழக்கு விசாரணை வந்த போது கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Income Tax Case... chennai high court refuses to discharge Karti Chidambaram
Author
Chennai, First Published May 12, 2020, 12:25 PM IST

வருமான வரித்தறையின் வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடியும் வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

Income Tax Case... chennai high court refuses to discharge Karti Chidambaram

அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி.யாக தான் இல்லாதபோது தொடரப்பட்ட வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில் எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

Income Tax Case... chennai high court refuses to discharge Karti Chidambaram

இந்த வழக்கு விசாரணை வந்த போது கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios