நகராட்சி தலைவர் பதவியை பாஜக கைப்பற்றும் சூழல் உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆளுமை திமுக கட்சி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றிபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 பேரூராட்சிகளில் தற்போது அவரது அனைத்து பேரூராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் நகராட்சிகளில் 137ல் 127ல் திமுகதான் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்த வார்டுகள் எண்ணிக்கை 21 ஆகும். இதில் 1 வது வார்டு - திமுக, 2 வது வார்டு - திமுக, 3 வது வார்டு - திமுக, 4 வது வார்டு - சுயேட்சை, 5 வது வார்டு - சுயேட்சை, 6 வது வார்டு - ஜனதா தளம், 7 வது வார்டு - சுயேட்சை, 8வது வார்டு - பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் 9வது வார்டு - சுயேட்சை 10வது வார்டு -பாஜக, 11வது வார்டு - பாஜக, 12வது வார்டு - சுயேட்சை, 13வது வார்டு - சுயேட்சை, 14வது வார்டு - திமுக, 15வது வார்டு - பாஜக, 16வது வார்டு - திமுக, 17வது வார்டு -திமுக, 18வது வார்டு - திமுக, 19வது வார்டு - பாஜக, 20வது வார்டு - பாஜக, 21வது வார்டு - பாஜக வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக 7 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் நகராட்சியை கைப்பற்றுவதில், சுயேட்சை ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே சமயம் சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேரில் 4 பேர் பாஜக ஆதரவு என்ற மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து நகராட்சித்தலைவர் பதவியை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.