எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 31 கொண்ட தமிழக அமைச்சரவை பதவி ஏற்று கொண்டது.

இதில் செங்கோட்டையன் மட்டுமே புதிய வரவு ஆவார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த பொறுப்புகளை தொடர்கின்றனர்.

ஆளுநர் அழைப்பு விடுத்த சிலமணி நேரங்களுக்குள் அதாவது மாலை 4 மணி அளவில் பதவியை ஏற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தின் 13 ஆவது முதலமைச்சராக சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி பதவி ஏற்கிறார்.

ஆளுநர் மாளிகையில் விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதில் சசிகலாவின் சகோதன் திவாகரன் அவரது மகன் ஜெய் ஆனந்த் வலதுபக்க முதல் வரிசையிலும் சசிகலாவின் அக்காள் மகனும் அதிமுகவின் புதிய துணை பொதுச்செயலாளருமான தினகரன் இடது பக்க முதல்வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.

பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி முதல் பாலகிருஷ்ண ரெட்டி வரை தினகரனுக்கும் திவாகரனுக்கும் பவ்யமாக வணக்கம் தெரிவித்தனர்.

ஜெயலலிதா இல்லாத இந்த அதிமுகவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சசிகலாவும் இல்லை. இதில் “center of attraction” எனும் கவனத்தை ஈர்க்க கூடியவர்களாக தினகரனும் திவாகரனும் மட்டுமே இருந்தனர்.

பதவி ஏற்பு விழா மட்டுமல்ல இனி ஆட்சியிலும் இவர்கள் தான் center of attraction ஆக இருப்பார்கள்.