Asianet News TamilAsianet News Tamil

இன்னும் மூன்றே மாதங்களில் கருணாநிதியின் கனவு நனவாகும்... கருணாநிதி சிலையின் கீழ் மு.க. ஸ்டாலின் சபதம்..!

இன்னும் மூன்று மாதங்களில் கருணாநிதியின் கனவு நனவாகும் என மதுரையில் திறக்கப்பட்ட கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 

In three more months, Karunanidhi's dream will come true. Stalin'says ..!
Author
Madurai, First Published Feb 17, 2021, 9:35 PM IST

தமிழகத்தில் முதன்முறையாக பொது இடத்தில் மதுரை சிம்மக்கலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 12 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த சிலை இங்கே அமைக்க பல்வேறு இடையூறுகள் இருந்தன. தடை, இடையூறுகளை மீறி சிலையைத் திறக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், முடியும் எனக் கருதினோம். அதன்படி கருணாநிதியின் சிலையை திறந்திருக்கிறோம்.

In three more months, Karunanidhi's dream will come true. Stalin'says ..!
கருணாநிதியின் நினைவிடத்தை நீதிமன்றம் மூலம் பெற்றது போலவே, நீதிமன்றம் மூலமே இந்தச் சிலையை நிறுவ அனுமதி பெற்று அமைத்திருக்கிறோம். கருணாநிதியின் சிலை தனிப்பட்ட முறையில் தனியார் இடங்களிலும் நமக்குச் சொந்தமான இடங்களிலும் ஏற்கனவே திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மதுரையில் எப்படியாவது சிலை வைக்க வேண்டும் என நினைத்த வேரத்தில் அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியபோது அனுமதி கிடைத்தது. இந்தச் சிலையை தீனதயாளன் உருவாக்கினார். கருணாநிதி சொல்லி பல சிலைகளைத் தயாரித்த தீனதயாளன், கருணாநிதியின் சிலையையும் அவர் செய்திருக்கிறார். இது வரலாற்றில் பதிவாகும் செய்தி.In three more months, Karunanidhi's dream will come true. Stalin'says ..!
இந்தச் சிலையில் எழுதப்பட்டுள்ள 5 கட்டளைகளான அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தித் திணிப்பை எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அமைப்போம். இந்த முழக்கங்களில் கருணாநிதியில் கனவு இன்னும் 3 மாதங்களில் நிறைவேற போகிறது. அது நிறைவேற கருணாநிதியின் சிலையின் கீழ் அனைவரும் சபதம் ஏற்போம்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios