டிடிவி தினகரனின் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சென்னை, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில் டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், கட்சியில் இருந்த நீக்க முடியாது என்றும் நேற்று கூறியிருந்தார்.

டி.டி.வி. தினகரன், தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடையே பேசும்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது என்று கூறினார்.

கட்சிக்கு யார் தேவை, யார் தேவையில்லை என்பதை கட்சியின் பொது செயலாளர்தான் முடிவு செய்ய முடியும் என்றார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது என்று
கூறியிருந்தார்.

டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, ரங்கசாமி, தங்கத்தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தினகரனின் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக திரும்பப்பெற வேண்டும என்று சென்னை, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஏழுமலை, செய்தியாளர்களிடம் மேலும் பேசும்போது, வருங்காலத்தில் ஆட்சியும், கட்சியும் டிடிவி தினகரன் வசம்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். சிலரது தூண்டுதல் பேரில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்தகைய அறிவிப்பை
வெளியிட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ. ஏழுமலை குற்றம் சாட்டியுள்ளார்.