ஈரோடு வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரம்..! விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று மாலையோடு பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், நாள் காலை வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதற்காக்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும் பணி நடைபெற்று வருகிறது.
வெறிச்சோடிய ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்து 22 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை தக்க வைக்க திமுகவினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றினர். இதே போல இரட்டை இலை சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்திற்கு மத்தியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்துள்ளது.
தாயை இழந்து தவித்த ஓபிஎஸ்..! நள்ளிரவில் வீட்டிற்கே ஓடி சென்று ஆறுதல் சொன்ன சீமான்
தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம்
எனவே கொங்கு மண்டலத்தில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக களம் இறங்கியுள்ளது, 100குக் மேற்பட்ட நிர்வாகிகளை களத்தில் இறங்கி ஈரோடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. வெளியூரில் இருந்த வந்த அரசியல் கட்சியினர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நாளை வாக்குப்பதிவுக்கான பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
விதியை மீறினால் கடும் நடவடிக்கை
இதனையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்த அந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் அதிகார் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள்