Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சியில் நீங்கள் வயிற்றெரிச்சலோடு தான் வாழ்ந்தாகணும்... விசிக எம்.பி., ரவிகுமார் குபீர் பேச்சு..!

தற்போது உள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு வயிற்றெரிச்சலை தான் ஏற்படுத்தும் என விசிக எம்.பி ரவிக்குமார் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

In the DMK regime, you will live with stomach ache ... says Vck MP, Ravikumar
Author
Tamil Nadu, First Published Sep 9, 2021, 2:46 PM IST

தற்போது உள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு வயிற்றெரிச்சலை தான் ஏற்படுத்தும் என விசிக எம்.பி ரவிக்குமார் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’மத்திய அரசின் அதிகாரத்திற்குள் இருக்கிறது. மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். அதனால் தான் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். திமுக அரசிடம் ரத்து செய்யும் அதிகாரம் இருந்தால் அவர்களே ரத்து செய்து விடப் போகிறார்கள். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. In the DMK regime, you will live with stomach ache ... says Vck MP, Ravikumar

அந்த தீர்மானங்கள் என்னென்ன செய்யும் என்பதை இப்போது இருக்கிற அரசிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். இதைப் பார்த்து நீங்கள் வயிறு எரிய வேண்டியதுதான். வேறு வழியில்லை. இப்போதிருக்கிறது தமிழக அரசு ஒவ்வொரு நாளும் வெளியிடுகிற அறிவிப்புகள் உங்களுக்கு பெரிய வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். வேறு வழியே கிடையாது. இந்த வயிற்றெரிச்சலோடு தான் வாழ்ந்தாகணும் நீங்கள். 

பாகிஸ்தானில் இருக்கிற சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது எனக்கூறுவதை புள்ளிவிவரத்துடன் மறுக்கிறேன். கிழக்கு பாகிஸ்தானும், மேற்கு பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது. 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 14.2 சதவிகிதம் பேர் சிறுபான்மையினராக இருந்தனர்.  பாகிஸ்தான் பிரிந்த பிறகு கிழக்கு பாகிஸ்தானில் 3.4 சதவிகிதம் பேர்தான் முஸ்லீம் அல்லாதவர்கள்.In the DMK regime, you will live with stomach ache ... says Vck MP, Ravikumar

இன்றைக்கும் 3.5 சதவிகிதம் பேர் அங்கு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இங்கு உள்ளவர்களின் குடியுரிமை சந்தேகத்திற்கு இடமாக ஆக்கப்படுகிறது.  அங்கிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல. இங்கிருப்பவர்களை யாரெல்லாம் வேண்டாமென்று நினைக்கிறார்களோ அவர்களை எல்லாம் தவிர்க்க நினைத்து அந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அதனை எதிர்த்தே திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது’’என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios