In the Assembly the DMK activist Stalin the Independent MLA entered DTV Dinakaran with a strong smile.
ஒக்கி புயலை ஓகே புயல் என்றும் எம்எல்ஏ பிரின்ஸை, ஜேம்ஸ் என்றும் செம்மலை சொன்னதால் சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் உள்ளிட்டோரால் பலத்த சிரிப்பலை கிளம்பியது.
தமிழக சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 8ஆம் தேதி தொடங்கி, வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்நிலையில், இன்று பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை எழுந்து பேசினார். அப்போது, ஒக்கி புயல் என்று கூறுவதற்கு பதிலாக ஓகே புயல் என்று கூறினார். இதைக்கேட்டு பேரவை முழுக்க சிரிப்பு சத்தமே கேட்டது.
இதைதொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ செம்மலை, எம்.எல்.ஏ பிரின்ஸ் என்று கூறுவதற்கு பதிலாக ஜேம்ஸ் என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் சிரிப்பலை கிளம்பியது. இதைக் கேட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதையடுத்து செம்மலை பேசிய இரண்டு வார்த்தைகளையும், அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கி உத்தரவிட்டார்.
