In future the pension will br release every month

ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி காலதாமதமின்றி மாதா மாதம் தவறாமல் பெறும் வகையில் தனி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முதியோர் ஓய்வுத் தொகை, பணி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வுத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கக்ள் எழுந்துள்ளன.

சில மாநிலங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், ஒரு சில ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் கூட வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்க அந்த முதியவர்களும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். சில நேரங்களில் அலைச்சல் மிகுந்து தங்களுக்கு ஓய்வூதியமே வேண்டாம் என்று கூறிச் செல்லும் முதியவர்களும் உண்டு.

மேலும் இந்த ஓய்வூதியங்கள் சரிவர கிடைக்கவில்லை என்ற புகார்களே பரவலாக இருக்கின்றன.

இந்நிலையில், கேரளாவில் இந்த நிலையை மாற்றுவதற்கு, மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஓய்வூதியத்தை மாதம் தோறும் தவறாமல் வழங்குவதற்கு, மாநில நிதித்துறையின் கீழ் புதிய அமைப்புஒன்றை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியம் வழங்கப்படும் அவல நிலை மாறி மாதந்தோறும் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதில் உள்ள அனைத்து குறைகளும் நீக்கப்பட்டு புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் அந்த அமைப்பிற்கு தலைவராக பினராயி பிஜயன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது,. இது ஓய்வூதியம் பெறும்கேரள மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.