Asianet News TamilAsianet News Tamil

காவேரி மருத்துவமனை முன்பு கொத்து கொத்தாக குவியும் தொண்டர்கள்...! பலப்படுத்தப்படும் போலீஸ் பாதுகாப்பு..!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை, சரியாக இன்று மாலை 6:30 மணியளவில் வெளியானது.

in cavery hospital Strengthened police protection production

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை, சரியாக இன்று மாலை 6:30 மணியளவில் வெளியானது.  இதில் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும். வயோதிகம் காரணமாக இவருடைய உடல் உறுப்பை இயக்க வைப்பது மிகவும் சவாலான விஷயமாக இருப்பதாகவும், இதனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் கூறமுடியும் என்பது போல் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சிகிச்சை கொடுப்பதன் மூலம் மீண்டும் கருணாநிதியின் உடல் நிலை சீராக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். 

in cavery hospital Strengthened police protection production

எனினும் அவரின் உடல் உறுப்பு இயக்கத்தை கவனிக்க வேண்டி உள்ளதால், மருத்துவ குழுவினர் அவரை தீவிரமாக கவனித்து வருகிறார்கள் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

in cavery hospital Strengthened police protection production

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மையே என திருநாவுக்கரசர் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தார்.அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். கருணாநிதிக்கு மருத்துவக் குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும் சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார்.

in cavery hospital Strengthened police protection production

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தற்போது திமுக தொண்டர்கள், காவேரி மருத்துவமனை முன்பு கொத்து கொத்தாக குவிய துவங்கியுள்ளனர். தொண்டர்களை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதகள் நடப்பதை தவிர்க்கவும், மருத்துவமனை வளாகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுதப்படுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios