இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக செல்ல உள்ளார். 

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டுச் செப்டம்பர் 11-ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 

வரும் செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரனின் 62-வது குருபூஜை நடைபெற உள்ளது. எப்போதும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செலுத்தப்படும். அதன் பிறகு அனைத்து கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர். இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இன்று முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில், மற்ற தலைவர்களின் நினைவிடங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மு.க.ஸ்டாலின் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு இதுவரை வரை சென்றதில்லை. இதன் காரணமாகவே எம்.பி.தேர்தலில் அனைத்து இடங்களிலும் முழுமையாக வெற்றிபெற்ற திமுக இடைத்தேர்தல்களில் போதிய இடங்களில் வெற்றி பெறவில்லை என்பதை திமுக தரப்பு உணர்ந்தது. 

அதே நேரத்தில் திருச்சி வழக்கிறஞர் பொன்.முருகேசன் மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து கடந்த காலத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார். அப்போது திருச்சியில் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உதவியுடன் இந்த வருடம் நடக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திடத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளார்.