மக்கள் நீதிமய்யத்தில் இருந்து வெளியேறிய குமரவேல், கோவை சரளா தன்னை நேர்காணல் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியதற்கு கோவை சரளா பதிலளித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல் ராஜினாமா செய்துவிட்டார். கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது போல் அவர் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதையும் ஏற்க முடியாது. 

நடிகை கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் செய்வதை ஏற்க முடியாததால்  விலகியதாக  அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பதிலளித்த கோவை சரளா, ’’குமரவேல் சொன்னதுபோல் நான் கட்சிக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகிறது. அதனால் எனக்கு அரசியல் தெரியல. ஒண்ணுமே தெரியாது. ஒரு முட்டாளை கொண்டு வந்து கமல்ஹாசன் வைத்துள்ளார் என குமரவேல் சொல்றாரா? அவர் நேரடியாக என்கிட்டயே இதை சொல்லட்டும். நான் அவருக்கு பதில் சொல்றேன். 

நான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவள். அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் என்னை அழைத்தார். என்னை மட்டும் அழைக்கவில்லை. மற்றவர்களும் இருந்தார்கள். அதாவது அரசியல் சம்பந்தபடாத பெரியவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்களை குமரவேலுவின் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் மட்டும் தான் தெரிகிறேனா?” என அவர் குமுறித் தள்ளியுள்ளார்.