Ilavarasi family members against TTV Dinakaran
அ.தி.மு.க.வினுள் மூண்ட உட்கட்சி கலவரத்தால் அந்த கட்சி எந்தளவுக்கு துண்டுத் துண்டாக சிதறிக்கிடக்கிறது, அக்கட்சியை ஆண்ட சசிகலா குடும்பம் எப்படி துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறது என்பதெல்லாம் தமிழகம் மட்டுமல்ல தேசமே அறிந்ததே.
இது ஒரு புறமிருக்கும் நிலையில் சசிகலாவின் குடும்பத்தின் உள்ளேயே கலவரம் வெடிக்கப்போகிறது, இதன் மூலம் தினகரனுக்கு எதிராக ஒரு படை கிளம்பப் போகிறது என்று புது தகவல் கிளம்பியிருக்கிறது. அது இளவரசியின் குடும்பத்தில் இருந்துதான் என்கிறார்கள்.
சமீப காலமாக இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணபிரியா இருவரும் பொது வெளியில் பல விஷயங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர். அதிலும் சசிகலாவுக்கு சாதகமான விஷயங்களை கூட விமர்சிக்குமளவுக்கு அவர்களுக்குள் தைரியம் பெருக்கெடுத்து இருக்கிறது.
.jpg)
ஜெயலலிதாவின் மருத்துவமணை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதை சசிக்கும், ஜெ.,வுக்கு நம்பிக்கை துரோகத்தை வெற்றிவேல் இளைத்துவிட்டார் எனும் ரீதியில் கிருஷ்ணப்பிரியா குற்றம் சாட்டி இருந்தார்.
.jpg)
இதேபோல் இளவரசியின் மகன் விவேக்கும், ரெய்டு தொடர்பாக பேசுகையில் ‘இது உள்நோக்கமுடியை நடவடிக்கை இல்லை’ என்று தினகரனுக்கு நேர் எதிரான ஸ்டெட்மெண்டை தட்டினார். அதேபோல ‘ஜெயலலிதாவை யாராவது அவமானப்படுத்திட நினைத்தால் சும்மா இருக்கமாட்டேன்.’ என்று அவர் கூறியதும் தினகரன் தரப்பை உரசிய விஷயங்கள்தான்.
ஆக மொத்தத்தில் தினாவுக்கு எதிராக அவரது குடும்பத்தினுள்ளேயே ஒரு தனி கூட்டம் தலையெடுக்க துவங்கி தலைவலி கொடுக்க ஆரம்பித்துள்ளது. இவர்களை யார் தூண்டி விடுகிறார்கள்? என்பதே தினகரனின் புதிர்.
.jpg)
இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பேசி வருவது புது ரூட்டாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில் மன்னார்குடி குடும்பத்தில் கூடிய விரைவில் மிகப்பெரிய பூசல்கள் வெளிப்படையாக வெடிக்கலாம் என்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க தினகரனை பலவீனப்படுத்தி ஆளும் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக அமையுமென்பதால் இந்த குடும்ப உள் பூசலுக்கு காரணமே அவர்கள்தானோ? என தினா தரப்பு டவுட்டுகிறது. இளவரசியின் வாரிசுகள் இப்படி வாண்டட் ஆக இம்சையை இழுப்பதனால் டோட்டலாக தங்கள் எல்லோருக்கும் தானே பிரச்னை என்று வருந்துகிறார் தினகரன். சசிகலாவுக்கு இந்த சேதியை சொல்லி அனுப்பி, அவரை இளவரசியிடம் பேசச்செய்து இளவரசி மூலமாக தங்களது வாரிசுகளின் வாயை அடைக்க முயல்கிறாராம்.
ஒருவேளை இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் உள் கலவரம் நடப்பது உறுதி என்கிறார்கள் விஷயத்தின் வீரியத்தை அறிந்தோர்.
