முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 30 ஆண்டு கதைகளை கிளறுவேன் எனக் கொதித்துள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 

கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி தமிழக அரசையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மானம் உள்ளவர்கள் தான் மான நஷ்ட வழக்கு போடலாம். இனி கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாகவும் தொடர்ந்து பேசுவேன். முடிந்தால் வழக்கு தொடரட்டும்.  மான நஷ்ட வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த தகுதி கிடையாது.

இதுவரை இந்த ஆட்சியின் ஊழல்கள் குறித்து மட்டுமே பேசி வந்தேன். இனி கொடநாடு கொலைகள் குறித்தும், 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கு குறித்தும் பேசுவேன். காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்த பாசறையில் இருக்கும் மோடிக்கு இப்போது காமராசரை பற்றி பேச தகுதி இல்லை’’ என அவர் கூறினார்.