பேசுவதை எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள கருவியை பாராளுமன்றத்திலும் பொறுத்தப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

வகுப்பறையாக இருந்தாலும் சரி, பாராளுமன்றமாக இருந்தாலும் சரி, பேசுபவர்கள் ஒரு பக்கம் பேசட்டும் நாம் நமது வேலையை கவனிப்போம் என்று சிலர் செல்போனிலோ, அல்லது தனி கற்பனையிலோ மூழ்கிவிடுவதுண்டு. இப்போதெல்லாம் யாரும் யார் சொல்வதையும் முழுமையாக காது கொடுத்து கேட்பதில்லை,  அனைத்தையும் சொல்லி முடித்த பிறகு அது என்ன இது என்ன என்று கேட்கும் நிலைதான் எங்கும் உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐஐடி யில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி இந்த ஆண்டும் துவங்கியுள்ளது. அதை பாரத பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார். அதில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பாக பல கருவிகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். அதில் ஒரு வகுப்பறையில் ஆசிரயர்கள் பாடம் நடத்துவதை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்கும் வகையில் புதிய கருவி ஒன்றையும் ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். 

அந்த கருவியை பிரதமர் மோடிக்கு மாணவர்கள் விளக்கி காட்டினர். அந்த கருவியை உருவாக்கிய மாணர்களை மோடி வெகுவாக பாராட்டினார். பின்னர் மேடையில் போசிய அவர். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது என்றார். ஓய்வு, உறக்கம், உணவின்றி மாணவர்கள் புதிய கண்டிபிடிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ரோபோடிக் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். உலகின் முதல் 3 ஸ்டாட் அப் நாடுகளில் இந்தியா இடம்பெற்று உள்ளது. என்று கூறிய அவர் 

முயற்சி , அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றார். ஐஐடி மாணர்கள் உருவாக்கியுள்ள பார்வையாளர்களை கண்காணிக்கும் கருவி பாராளுமன்றத்திலும் பொறுத்தப்படும் என்று கூறினார்.அப்போது மாணவர்கள் மோடிக்கு உற்சாகமான கைதட்டி பாராட்டினர். சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 56 வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.